கனடாவில் வாடகைத் தொகை தொடர்பில் வெளியான தகவல்

7

கனடாவிற்குள் சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் அனைத்து பகுதிகளிலும் சராசரி வாடகைத் தொகையானது குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தற்பொழுது வாடகைத் தொகை அதிகரிப்பு வீதம் குறைவடைந்துள்ளது.

கனடாவிற்குள் சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ரென்டல்ஸ்.சீஏ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.  

கடந்த மாதம் நாட்டின் சராசரி மாத வாடகைத் தொகை 2193 டொலர்கள் என பதிவாகியுள்ளது.

இந்த வீழ்ச்சிக்கான பிரதான ஏதுவாக வெளிநாட்டு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் நடைமுறைப்படுத்தப்படும் கெடுபிடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  

Comments are closed.