வாகன இறக்குமதி தொடர்பான அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு! வெளியான அறிவிப்பு

8

அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல்  தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஆறு பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதால், வாகன இறக்குமதிக்கு  கடந்த அரசாங்கத்தினால் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர் தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த திட்டமிட்டுள்ளதாக  கடந்த அரசாங்கம் மேலும் அறிவித்திருந்தது.

இதன்படி, வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  

Comments are closed.