முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கம்! நீதிமன்றம் உத்தரவு

6

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலிற்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை இந்த இரண்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொக்கல மற்றும் மத்துகமவில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு தடை செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.