மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட உள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கக்கூடிய மின் கட்டண முறையை அறிமுகம் செய்யும் நோக்கில் விலைச் சூத்திரம் மீளாய்வு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாயவின் பின்னர், புதிய விலைப் பொறிமுறைமையை ஜனாதிபதியும் துறைசார் அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னர், இந்த யோசனை புதிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed.