புதிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக தாம் இருப்பதால், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா, அரசியலில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண் ஹரிணி அமரசூரிய ஆவார் என்றும் கல்வியுடனும் பரிபூரணத்துடனும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஹரிணி அமரசூரியவை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.