எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த மதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் பல நாடுகளை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.