பிக் பாஸ் 8வது சீசனில் ஆண்கள் vs பெண்கள் என வீடே இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு நடுவில் தான் எல்லா போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் அடிதடி சண்டை போட்டனர். ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை சமாதானப்படுத்த மற்ற பெண் போட்டியாளர்கள் முயற்சி செய்தனர். மேலும் அந்த சண்டையில் கீழே விழுந்து தனக்கு கையில் அடிபட்டு விட்டது என அருண் பிரசாத் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார்.
அதன் பின் பெண்கள் எல்லோரும் இந்த சண்டை பற்றி நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தனர். இறுதியாக ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரையும் வர வைத்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வைத்தனர்.
அப்போது தான் அவர்கள் செய்தது எல்லாமே டிராமா என்பதை வெளியில் கூறினார்கள். அதை பார்த்து பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
ரஞ்சித் இப்படி நடித்ததற்காக மன்னிப்பு கேட்டு காலிலேயே விழுந்துவிட்டார்.
பிக் பாஸ் ஜாக்குலின் இந்த சம்பவத்துக்கு பிறகு கதறி அழ ஆரம்பித்துவிட்டார். இப்படி ஏமாற்றிவிட்டார்களே என அவர் புலம்பினார்.
மற்ற பெண் போட்டியாளர்களும் ஆண்களின் நடிப்பால் அதிகம் டென்ஷன் ஆகிவிட்டனர்.
Comments are closed.