இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் இணைய குற்றச் செயல்கள் தொடர்பில், 9,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி இணையக் குற்றச் செயல்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவலையளிக்கும் வகையில், இந்த முறைப்பாடுகளில் 80 வீத சமூக ஊடக தளங்களை உள்ளடக்கிய குற்றங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சிறுவர்களை மிரட்டிய 85 முறைப்பாடுகளும், சிறுவர் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய 40 முறைப்பாடுகளும் உள்ளடங்கியுள்ளன.
இதனால் இணையப் பயனர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் இணைய அச்சுறுத்தல்கள் தொடர்வதால், தனிஆட்களும் நிறுவனங்களும் விழிப்புடன் இருப்பதும், சாத்தியமான இணையத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Comments are closed.