உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம்

8

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அரச நிகழ்வுகளுக்கு மேற்சட்டை சேர்ட் அணியாமல், திராவிட முன்னேற்றக்கழகக் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டீசேர்ட்டை அணிந்து செல்வது தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது மாத்திரமல்லாமல், உதயநிதிக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

உதயநிதி டீசேர்ட் அணிவதை குறைகூறவில்லை. அவர் கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் அதனை அணிந்து செல்லலாம். எனினும் அரச நிகழ்வுகளுக்கு அதனை தவிர்க்கவேண்டும். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் தாம் அதனை வாங்கி தரமுடியும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அரச நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன. 2019ஆம் ஆண்டின் உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும் என்றும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.