கனேடிய நகரமொன்றில், முதன்முறையாக முற்றிலும் இலவச மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளது. மக்கள் கடைக்குள் நுழைந்து தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
கனடாவின் Saskatchewan மாகாணத்திலுள்ள Regina நகரில் அமைந்துள்ள Regina உணவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கோவிட் தொற்று உருவானபின், கனடாவில் உணவு வங்கிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. Reginaவில் மட்டும் உணவு வங்கிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவிகிதம் வரை உயர்ந்தது. Regina நகரில், எட்டு குடும்பங்களில் ஒன்றும், நான்கு பிள்ளைகளில் ஒருவரும் உணவு வங்கிகளை நாடும் நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக, இந்த கோடையில் இலவச மளிகைக்கடை ஒன்றை திறக்க திட்டமிடப்பட்டுவருகிறது. இந்த மளிகைக்கடைக்கு வருவோர், தங்களைக் குறித்த சில அடிப்படை விவரங்களைக் கூறி பதிவு செய்துகொள்ளவேண்டும்.
அதற்குப் பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் பெற்று, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர்கள் இந்தக் கடைக்கு வந்து, 200 டொலர்கள் மதிப்புடைய மளிகைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
Comments are closed.