பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்?

8

இன்று பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 8 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என கமல் ஹாசனுக்கு பதிலாக தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் களமிறங்கியுள்ளார்.

விஜய் சேதுபதி எந்த அளவிற்கு மக்களை கவருவார் என பொறுத்திருந்து பார்ப்போம். இந்த பிக் பாஸ் சீசன் 8 துவங்குவதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில், ஒரு முன்னோட்டோம் நடைபெற்றுள்ளது.

இந்த முன்னோட்டோம் நிகழ்ச்சியில் இதற்கு முன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சில முக்கிய போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பிக் பாஸ் ரசிகர்களும் இதில் பங்கேற்று தங்களது விருப்பங்களையும் தெரிவித்து, கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த நபர் சென்ற நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புவது யாரை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தளபதி விஜய் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நன்றாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Comments are closed.