அநுராதபுரத்தை சேர்ந்த பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற காரணத்தினாலே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்ப்பதற்காக பெண்ணொருவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த பெண் கொண்டு சென்ற உணவு பொதியில் இருந்த தேங்காய் சம்பலில் போதைப்பொருள் கலந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.