எதிர்வரும் 27ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாளை விசேட தினமாக அறிவித்து, பொது தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 11ஆம் திகதி வரை ஏற்று கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.