இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

19

இலங்கையில் (sri lanka)வருடாந்தம் சுமார் 3500 சிறுவர்கள் பாரிய குற்றச் செயல்களுக்கு ஆளாவதாக பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறு குற்றங்களில் சுமார் 1500 குழந்தைகள் ஈடுபடுவதாகவும் அவர் தெரவித்தார்.

இந்த நாட்டில் சிறுவர்கள் இணையத்தில் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்றார். அந்த நிலையில் இருந்து அவர்களை மீட்பது கடினமாகிவிட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறுவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். அதனையொட்டியே அவர் இலங்கையில் சிறுவர்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

Comments are closed.