எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனுபவமுள்ளவர்களை முற்றுமுழுதாக புறந்தள்ளாமல் அவர்களில் சிலருக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் வாக்காளர்களின் எதிர்பார்ப்பிற்கமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் (Mannar) நேற்றைய தினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இளையவர்கள், யுவதிகள் மற்றும் ஆற்றலுள்ளவர்களை முதன்மைப்படுத்தி அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”பழையவர்கள் எல்லோரையும் அப்புறப்படுத்திவிட்டு புதியவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது நடைமுறை சாத்தியமற்றதும் விவேகமல்லாததுமான தீர்மானமாக இருக்கும்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) சிபார்சின் அடிப்படையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அங்கஜன் இராமநாதனின் (Angajan Ramanathan) தந்தையின் சிபார்சின் பேரிலும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கான கடிதம் கூட வெளிவந்திருந்தது.
தமிழரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம்“ என தெரிவித்தார்.
Comments are closed.