தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் இன்று (01.10.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தானது பாடசாலை சுற்றுலாவிற்காக மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் வரை பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், பேருந்தில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.
Comments are closed.