இஸ்ரேலின் தாக்குதல்கள்: லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோர்

8

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, ஏற்கனவே லெபனான் முழுவதிலும் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் நஜிப் மிகாடி (Najib Mikati) தெரிவித்துள்ளார்.

இது லெபனானில் நடந்திருக்கக்கூடிய மிகப்பெரிய இடப்பெயர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், நேற்று (29.09.2024) நடத்தப்பட்ட தாக்குதல்களில் 50இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் வடக்கு இஸ்ரேல் மீது அதிகமான எறிகனை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தநிலையில், உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த மதகுரு சேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளது.

Comments are closed.