பொதுத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் கையொப்பமிட்டார் அநுர

9

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) கையொப்பமிட்டுள்ளதாக பொதுத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பிலான இரண்டு சந்திப்புகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளன.

மேலும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு இடையே இந்த சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன.

Comments are closed.