கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

12

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகையாக இது கருதப்படுகிறது, இதன் பெறுமதி 43,646,800 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பு சேவை அதிகாரியாக கடமையாற்றி வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இன்று காலை 09.35 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் கீரின் செனல் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான நடத்தை காரணமாக சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டு இரண்டு பைகளில் 43 கிலோகிராம் 648 கிராம் குஷ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.