பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு வருடங்களாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் இந்த அவர் விலகிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை தொகுப்பாளராக கொண்டு வந்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி உடன் பிக் பாஸ் 8 ப்ரொமோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கிறது.
பிக் பாஸ் முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ரச்சிதா தற்போது அளித்த ஒரு பேட்டியில் கமல் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கூறி இருக்கிறார்.
எந்த தலைப்பு என்றாலும் அதை பற்றி கமல் சில நிமிடங்கள் பேசுவார். மக்களும் அதை ரசித்து கேட்பார்கள். அந்த அளவுக்கு அவருக்கு knowledge இருக்கிறது.
ஆனால் விஜய் சேதுபதி எல்லோரிடமும் எளிமையாக பேச கூடியவர். அவர் வந்தால் போட்டியாளர்கள் எல்லோரும் ஜாலியாக வெளிப்படையாக பேச முடியும் என நினைக்கிறேன் என ரச்சிதா கூறி இருக்கிறார்.
Comments are closed.