பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை குறித்து ஓபனாக கூறிய KPY சரத்… அதுக்காக கூட செய்திருக்கலாம்

9

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் நிறைய என்டர்டெயின்மென்ட் என்ற கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். எந்த ஷோ பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வந்தார்கள்.

இந்த வருடம் படு கோலாகலமாக 5வது சீசன் ஒளிபரப்பானது, ஆனால் இதில் பழைய சீசன்களின் டச் இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருந்தது.

தற்போது நிகழ்ச்சியில் மணிமேகலை தன்னை ஒரு போட்டியாளர் தன் வேலையை செய்ய குறுக்கிடுகிறார் இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறி ஒரு வீடியோ வெளியிட பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து KPY சரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இவங்க இரண்டு பேரோட பிரச்சனை நாட்டுக்கு தேவை இல்லை, இன்னைக்கு அடிச்சிப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க.

அன்னைக்கு நாம் தான் முட்டாளா ஆகியிருப்போம். நம்மல மறந்துட்டாங்கனு நெனச்சு கூட இப்படி பண்ணியிருக்கலாம், வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டாங்க என கூறியிருக்கிறார்.

Comments are closed.