நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் இன்றையதினம் (21) அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் கூறப்படுகின்றது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.