ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

9

ரஷ்யாவின் (Russia) –  ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா விமான (drone) தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்வெர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நிகோபோல் நகரின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீட்பதற்கான ரஷ்யாவின் எதிர்த்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என அப்பகுதியில் அமைக்கப்பட்ட உக்ரைனின் இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குர்ஸ்க், பிரையன்ஸ்க், ஸ்மோலென்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பகுதிகளில் உக்ரைன் எல்லை மற்றும் அண்டை நாடான ஓரியோல் பகுதியில் 27 உக்ரேனியஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.