இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

8

இஸ்ரேலிய (Israel) போர் விமானங்கள் கடந்த சில மணித்தியாலங்களாக தெற்கு லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்பொல்லா இலக்குகளை தொடர்ந்து தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போர் விமானங்கள் சுமார் 1,000 பீப்பாய்கள் கொண்ட சுமார் 100 ராக்கெட் லாஞ்சர்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காசா நகரின் தராஜ் சுற்றுப்புறத்தில் அல்-ஷேக் குடும்பத்திற்கு சொந்தமான வீடு தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரண்டு பெண்கள் உட்பட ஆறு பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் 05 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் (Hamas) எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

போரில் இதுவரை 44,000க்கும் அதிகமான காசா (Gaza) மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.