தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று தகவல் பரவிய நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துணை முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் முடிவு எடுப்பார். அது அவரது தனிப்பட்ட முடிவு.
அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.
மேலும் பெரியாருக்கு விஜய் மரியாதை அளித்தது தொடர்பாக அவர் பேசுகையில், ” தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” என்றார்.
Comments are closed.