ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் (18ஆம் திகதி) காலை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 1 அதிகாரியான நிஹால் அழககோன் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு .கமகே இது தொடர்பான நியமனக் கடிதத்தை நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) காலை அழகோனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வாறு மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒருவரை நியமிப்பது பிரச்சினைக்குரியது என தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது தேர்தல் சட்டத்தை மீறிய செயலா என கண்டி மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தன தென்னகோனிடம் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக மத்திய மாகாண கல்விச் செயலாளரிடம் வினவியதாகவும், நியமனம் தொடர்பான நேர்முகத்தேர்வுகள் பதினான்காம் திகதி நடத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
குறித்த உத்தியோகத்தரின் தகைமை தொடர்பில் பிரச்சினை இல்லையென்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு நியமனங்களை வழங்குவதன் மூலம் நியமனம் பெற்றவரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments are closed.