தேர்தல் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

9

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் தேசிய பாதுகாப்பு சபை (National Security Council) உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல் ஆணையக்குழுவிற்கு ஆதரவு அளிப்பது, வேட்பாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பது, தேர்தலுக்குப் பிந்தைய சட்டம் மற்றும் ஒழுங்கை அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல் பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து பலதரப்பட்ட அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்தும் வாக்காளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மேலும், இது குறித்த அறிவுறுத்தலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.