பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி வெற்றி காண்பது வழக்கமான ஒரு விஷயம்
அப்படி வெள்ளித்திரையில் கலக்கிய நடிகர் லிவிங்ஸ்டன் மகன் ஜோவிதா சின்னத்திரையில் நடிக்க களமிறங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்த தொடர் மூலம் ஜோவிதாவிற்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது, ஆனால் திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தனது உயர்கல்வி படிப்பை தொடர்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
பின் சன் டிவியிலேயே அருவி தொடரில் நடித்து வந்தார், தற்போது அந்த தொடரும் முடிவுக்கு வந்தது.
அருவி தொடருக்கு பின் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்த ஜோவிதா குறித்து சூப்பர் தகவல் வந்துள்ளது. அதாவது ஜோவிதா ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
மற்றபடி சீரியல் குறித்து எந்த தகவலும் இல்லை.
Comments are closed.