இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கமல் ஹாசன்.
கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன் 2 எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் இந்த படம் படுதோல்வி அடைந்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது.
இந்தியன் 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார் கமல் ஹாசன். தற்போது,இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கமல் ஹாசன் குறித்து ராதிகா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
ராதிகா பேசுகையில், கமல் ஹாசன் படம் என்றாலே கண்டிப்பாக அதில் கதாநாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகள் சில இருக்கும். இதன் காரணமாக சில நடிகைகள் பயந்துகொண்டு கமலஹாசனுடன் நடிக்க மறுத்துள்ளனர்.
அந்த வகையில், நானும் அதுபோல் நடிக்க மறுத்தேன் அதற்காக எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று கூறியுள்ளார்.
தற்போது, அவர் கூறிய இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இவ்வாறு கமல் ஹாசன் கட்டாயப்படுத்தித்தான் நடிகைகளை நடிக்க வைக்கிறாரா என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Comments are closed.