தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண் பிரதமர் : விஜித ஹேரத் தெரிவிப்பு

14

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை நடத்த முடியும் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அநுர ஜனாதிபதியான பின்னர் கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்மன் நிபுனாராச்சி புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கலாம், ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார், அது, ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.என்றார்

Comments are closed.