யாழில் சஜித்தின் பிரசார மேடையில் திடீரென ஆவேசமடைந்த ரிஷாத் பதியுதீன்!

9

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் திடீரென ஆவேசமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவருக்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

அதனை படித்துப் பார்த்த ரிஷாத் பதியுதீன், அந்த கடதாசியை எடுத்து ஆவேசத்துடன் கீழே வீசிவிட்டு தனது உரையை முடித்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில், அவரது இந்த செயற்பாடானது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.