தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிக்க தீர்மானம்

8

இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில், நேற்று (15.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கிளிநொச்சி மாவட்ட பிரத்தியேக செயலாளரும், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான குமாரசிங்கம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட மண்ணிலிருந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், சிலர் சங்கு சின்னம் எனும் பெயரில் தமது சுயலாபத்திற்காக செயற்படுவதாகவும் தெரிவித்த குமாரசிங்கம், அது மக்களினதோ, தமிழரசுக் கட்சியினதோ தீர்மானம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.