திருகோணமலையில் அரியநேத்திரனுக்கு அமோக ஆதரவுடன் தேர்தல் பரப்புரை கூட்டம்

8

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம், நேற்று (14.09.2024) மாலை திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் நடைபெற்றுள்ளது.

அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா இந்தப் பிரசாரக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.

இதன்போது, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.

Comments are closed.