சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி: முன்னாள் இராணுவ மேஜர் வாக்குமூலம்

9

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், ஏனைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக்கூறி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது குறித்த மேஜர், இந்த கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த காணொளியை உறுதிப்படுத்தி காணொளி நாடாவை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், காட்சிகளுடன் போலி குரல் சேர்க்கப்பட்டுள்ள காணொளி ஒன்று குறித்து, தேசிய மக்கள் சக்தி தகவலை வெளியிட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.