விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை நடுவர்கள் திடீரென வெளியேற்றினார்கள். திவ்யா துரைசாமி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் ஒரே நாளில் எலிமினேட் ஆனார்கள்.
இதனை தொடர்ந்து அடுத்து வாரம் செமி பைனல் நடைபெற இருக்கிறது. அதில் நான்கு போட்டியாளர்கள் மோத இருக்கின்றனர்.
பிரியங்கா, சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல் ஆகிய நான்கு பேர் தான் போட்டியிடுகின்றனர்.
விரைவில் பிக் பாஸ் தொடங்குவதால் அதற்கு முன்பு CWC 5 முடிக்க டிவி சேனல் அவசரம் காட்டுவதாக தெரிகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Comments are closed.