கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இளைஞன்: சாரதி தப்பியோட்டம்

10

காரில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி நடு வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிள் சாரதியை பின்னால் வந்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞனின் இரண்டு கால்களும் ஒரு கையும் முறிந்துள்ளதுடன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்த இளைஞன் இரவு பணியை முடித்துக்கொண்டு கொழும்பில் இருந்து ஹைலெவல் வீதி வழியாக கோட்டாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது காரில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் வீதியில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதன்போது பின்னால் வந்த ஜீப் வண்டி மீண்டும் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், தற்போது ஜீப்பை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.