ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் முதன்மையான ஒருவராக காணப்படுகின்றார்.
எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவிற்கு மக்களின் ஆதரவின் வெளிப்பாடு வேறுபட்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்கின்றது.
இந்நிலையில் சஜித்தின் ஆதரவாளர் சிலர் சுட்டிக்காட்டக்கூடிய விடயம் அல்லது அவர்கள் உருவாக்கி வரும் விம்பம் என்னவெனில், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு-கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மாவட்டங்களில் மிக மோசமான வாக்குகளை கோட்டபாய பதிவு செய்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித், வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் முழுமையான வாக்குகளை பெற்று முதலிடத்திற்கு வந்தார். எனவே இம்முறையும் அதிக வாக்குகளை பெறுவார் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
Comments are closed.