ரோயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக பல வருட ஒப்பந்தத்தில் நியமிப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன் ரோயல்ஸின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரவுடன் இணைந்து, உரிமையாளரின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வியூகத்தை செயல்படுத்த உடனடியாக ராகுல் செயற்படுவார் என்றும் ரோயல்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
51 வயதான டிராவிட், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராவார்.
2014 இல் அவர் ரோயல்ஸுடன் தனது பயிற்சி வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் தலைவராக இருந்து அணியின் வழிகாட்டியாக அவர் மாறினார்.
Comments are closed.