தலையில் பாய்ந்த தோட்டாவுடன் உயிருக்கு போராடும் கேரள சிறுமி: லண்டன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி

14

லண்டனில் போதை மருந்து கடத்தல் குழுக்களுக்கு இடையே நடந்த பழி தீர்க்கும் தாக்குதல் சம்பவத்திலேயே கேரள சிறுமிக்கு தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட Abdullah Baybasin என்பவரது குழுவினருக்கு எதிராகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் அந்த குழுவினர் இந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு பங்கில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த Abdullah Baybasin உருவாக்கிய Hackney Bombers என்ற குழுவே ஒருகாலத்தில் பிரித்தானியாவின் போதை மருந்து வர்த்தகத்தின் 90 சதவீதத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஆனால் விசாரணை வட்டத்தில் சிக்கிய Abdullah Baybasin போதை மருந்து, துப்பாக்கி உள்ளிட்ட குற்றச்செயல்களால் நாடு கடத்தப்பட்டார். சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலையில் இருக்கும் 64 வயதான Abdullah Baybasin கடந்த மாதம் துருக்கிய வம்சாவளி ஜேர்மானிய போதை மருந்து கடத்தல் குழு தலைவரான 30 வயது Tekin Kartal என்பவரை பார்சிலோனாவில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் Tekin Kartal படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை வட கிழக்கு லண்டனில் செயல்பட்டுவரும் துருக்கிய உணவகத்தில் நடந்த தாக்குதலானது இரு குழுக்களுக்கு இடையே நடந்த பழி தீர்க்கும் நடவடிக்கை என்றே கூறப்படுகிறது.

Abdullah Baybasin என்பவரது பழைய குழு உறுப்பினர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. இதில் கேரளாவில் இருந்து உறவினர்களை சந்திக்கவும் விடுமுறையை கொண்டாடவும் லண்டன் வந்த 9 வயது சிறுமி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

மட்டுமின்றி Hackney Bombers குழுவை சேர்ந்த 37, 42, 44 வயதுடைய மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.