ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் (Election Commission ) தெளிவுபடுத்தியுள்ளது.
இது சட்டவிரோதமானது என்பதையும் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில்;, இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயல்களாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள், எனவே பொதுமக்கள் தாங்களாகவே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுத்துறையின் சம்பள திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு தொடர்பில் கவலை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், அது தற்போது நடைபெற்று வரும் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதை ஏற்றுக்கொண்டார்.
Comments are closed.