எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்தள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சஜித் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
இதற்காக அங்கும் இங்கும் தகவல்களை அனுப்பி வருவதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலுடன் கூட்டிணையப் போவதில்லை என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.