வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (Govindan Karunakaram) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சி சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும்.
இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தை தெரிவித்திருந்தனர்.
ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர.
இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என மட்டக்களப்பு (Batticaloa) நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.