அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்

11

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை என்றும் அதன் நிதி நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு நாட்டைத் திருப்ப முனைவோர் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த கால நிதி சிக்கல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக விரிவான கலந்துரையாடலின் பின்னரே தற்போதைய உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், எனவே மாற்றங்கள் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.