அரகலய என்ற காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக தானும் முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்காரவும்(Manusha Nanayakkara) மாருதி கார் ஒன்றில் மறைந்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய நீதிமன்றத் தீர்ப்பால் தாம் கவலைக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் போது, தாம் தாக்கப்படலாம் என்ற பயத்தில், ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க மனுச நாணயக்காரவுடன் சேர்ந்து மாருதி காரில் மறைந்த நிலையில் பயணிக்க வேண்டியிருந்தது எனவும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டு ரணிலின் அமைச்சரவையில் இணைந்து கொள்ள முடிவெடுத்த பின்னர், வீடு தாக்கப்படலாம் என்ற அச்சத்தில், தமது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியதாகவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.
Comments are closed.