தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

12

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 வரையில் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் என்பனவற்றுக்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது, சொத்துக்கள் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விதி மீறல்கள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.