2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை

11

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கரட் தங்கத்தின் விலை 2,512.18 டொலர்களாக  உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.22% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 211,950 ரூபாவாகவும்,  ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 194,350 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும்,  21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 185,500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.