கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விடுதியொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, அநுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 25-40 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியின் முகாமையாளராக பெண் ஒருவர் செயற்பட்டு வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவிற்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed.