மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு இது தான் காரணம்!! நடிகர் சாந்தனு கொடுத்த விளக்கம்..

14

குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நித்திலன் சாமிநாதன்.

இதனை அடுத்து விஜய் சேதுபதியின் 50-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட நித்திலன் சாமிநாதன், பான் இந்தியா டு பான் வேர்ல்ட் கொண்டு சென்றுவிட்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நித்திலன் சாமிநாதன் மகாராஜா கதை விஜய் சேதுபதிக்கு எழுதப்பட்ட கதை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த கதைக்கு ஹீரோவாக முதலில் சாந்தனுவை தான் தேர்வு செய்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு ஒரு பதிவு செய்துள்ளார். அதில், மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி எனவும், நான் முதலில் இந்த கதையை தேர்வு செய்தேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறினார்.

மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானும் காரணம் இல்லை என்றும், அப்பாவிற்கு இயக்குனர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது என்றும், தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் படம் எடுக்க தாமதம் ஆகிவிட்டது என்றும் சாந்தனு பதிவிட்டுள்ளார்.

Comments are closed.