பிரபலங்களில் யாராவது நிஜத்தில் ஜோடி சேர்ந்தால் அதுதான் ரசிகர்களுக்கு டாப் நியூஸாக தெரியும்.
அப்படி சமீபத்தில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவிற்கு மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தான் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது, புதிய ஜோடியின் புகைப்படத்துடன் நடிகர் நாகர்ஜுனா தான் இதனை அறிவித்தார்.
இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு சோபிதாவை, நாக சைத்தன்யா டேட்டிங் செய்து வந்தார். இப்போது நிச்சயதார்த்தம் செய்து முடித்துவிட்டனர், எப்போது திருமணம் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யாவிற்கும், சோபிதாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் குறித்த தகவல் வலம் வருகிறது.
1986ம் ஆண்டு பிறந்த நாக சைத்தன்யாவிற்கு 38 வயது ஆகிறதாம், சோபிதாவிற்கு 32 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே 6 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளதாம்.
Comments are closed.