விண்வெளிக்கு செல்லவுள்ள முதல் ஜேர்மன் பெண்

13

விண்வெளிக்கு செல்லவுள்ள முதல் ஜேர்மன் பெண் என்ற பெருமையினை ரபேயா ரோஜ் (Rabea Rogge) பெற்றுள்ளார்.

ரோபோடிக்ஸ் ஆய்வாளரான Rabea, ஸ்பேஸ் எக்ஸின் Falcon 9 என்னும் விண்கலத்தில் , 4 விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார்.

மேலும், சூரிச்சிலுள்ள ETHஇல் மின் பொறியியலும், தகவல் தொழில்நுட்பமும் கற்ற Rabea, நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் Fram2 என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் Rabea, பூமியின் துருவங்களுக்குச் செல்லவிருக்கும் முதல் விண்வெளித் திட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

2024 இறுதிக்குள் Rabea விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நிலையில், தன்னை இந்த திட்டத்துக்குத் தேர்ந்தெடுத்ததை தான் கௌரவமாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.